இந்த வருடம் பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆகாத காரணத்தால் அந்த இடத்தை நிரப்ப 10க்கும் மேற்பட்ட சின்ன படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றனர்.
கிஷன் தாஸ் நடிப்பில் தருணம் என்ற படமும் நேற்று வெளியாகி இருந்தது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
அப்படியே கிடைத்த இடங்களிலும் சில காட்சிகள் ரத்து ஆகி இருக்கிறது.
நிறுத்திவைப்பு
இந்நிலையில் தருணம் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஓடிவிட்ட நிலையில் தற்போது ரிலீஸ் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கின்றனர்.
புதிதாக வேறொரு நாளில் படம் மீண்டும் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதை பற்றி நடிகர் கிஷன் தாஸ் சோகமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
A heartfelt update on #Tharunam
Thanks to everyone who watched and are watching the movie ❤️ pic.twitter.com/eyk8ogdq1o— Kishen Das (@kishendas) January 15, 2025