வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பூஜா ஹெக்டே
அவர் வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே தான். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே தனது தோழியுடன் பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது.
பூஜா ஹெக்டே தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியே போகும் முக்கிய நடிகை.. TRP-க்கு பாதிப்பு வருமா
இதை தொடர்ந்து தமிழுக்கு மீண்டும் வந்த பூஜா பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது விஜய்யின் ஜனநாயகன், ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
