சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி வருடம் ஆரம்பித்ததில் இருந்து நிறைய இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.
காரணம் நாள் ஒன்றிற்கு புத்தம் புதிய சீரியலின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இப்போதும் ஒரு புதிய சீரியலின் அறிவிப்பு வந்துள்ளது.
பூங்கொடி
சன் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் தொடர் பெயர் பூங்கொடி. சில பார்த்த முகங்களும், புதுமுக நடிகர்களும் இந்த தொடரில் நடிக்க களமிறங்கியுள்ளார்கள்.
கிராமத்து கதை பின்னணியில் குடும்ப பாங்கான கதையில் இந்த தொடர் உருவாகியிருப்பது புரொமோ பார்க்கும் போது தெரிகிறது.