Home சினிமா நான் தனுஷின் ராயன் படத்தை மிஸ் செய்துவிட்டேன்… வருந்திய பிரபல நடிகர்

நான் தனுஷின் ராயன் படத்தை மிஸ் செய்துவிட்டேன்… வருந்திய பிரபல நடிகர்

0

தனுஷ் ராயன்

தனுஷ் தன்னை நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக தன்னை நிரூபித்து வருகிறார்.

கடைசியாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார், ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இப்படத்திற்கு முன் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் ராயன்.

தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி என பல நட்சத்திரங்களும் நடித்தனர்.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 160 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

வருத்தம்

இந்த படத்தில் சுதீப் கிஷன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நான் நடிக்க இருந்தேன், ஆனால் தேதி பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார் பிரபல நடிகர்.

வருகிற அக்டோபர் 31ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ஆர்யன்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் பேசும்போது, ராயன் படத்தில் சுதீப் கிஷனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவிருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்காக மீண்டும் எழுதச் சொன்னேன்.

திடீரென வீட்டிற்கு வந்த நபர், ஷாக்கில் ஜனனி, நந்தினி, ரேணுகா… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

தனுஷ் சார் உடனடியாக ஒப்புக்கொண்டார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், எனக்கு தேதிகள் பிரச்சினைகள் இருந்தன, அதனால் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version