Home இலங்கை சமூகம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பதவிக்கு ரணில்…! வெளியான தகவல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பதவிக்கு ரணில்…! வெளியான தகவல்

0

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காரணம்

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

Source: https://ibctamil.com/article/position-in-asian-development-bank-to-ranil-1727422725

NO COMMENTS

Exit mobile version