டிட்வா சூறாவளியால் நெல் சாகுபடிக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி பற்றாக்குறை ஏற்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நெல் நிலங்கள் மீண்டும் பயிரிடப்பட்டால் சிவப்பு மற்றும் நாட்டு அரிசிக்கு பற்றாக்குறை இருக்காது என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பா வகை அரிசி
ஆனால் சம்பா வகைகள் வளர சுமார் நான்கு மாதங்கள் ஆகும், இதனால் மீண்டும் நடவு செய்வது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.
நிலக்கடலை, சோளம், பச்சை மிளகாய் உள்ளிட்ட பிற பயிர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் அழிந்துவிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
