Home இலங்கை சமூகம் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு மலையக பகுதியிலும் ஆதரவு

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு மலையக பகுதியிலும் ஆதரவு

0

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் முன்னெடுக்கப்படும் 48 மணிநேர அடையாள
பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாக மத்திய மலைநாட்டு பகுதியிலுள்ள தபாலக ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கமைய, இன்றைய தினம் (08.07.2024) நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் நானுஓயா (Nanuoya) பிரதான தபாலக ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, இவ்விரு பிரதான தபால் நிலையங்களிலும் கடித விநியோகம் முற்றாக
நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. 

சிரமத்தில் மக்கள் 

அதேவேளை, கடித விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான
கடிதங்கள் பிரதான தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், சேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்காமை காரணமாக தபால்
நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version