Home இலங்கை அரசியல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில வெளியான தகவல்

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில வெளியான தகவல்

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (Local Government Election) தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் (Election Commission) ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

அரச ஊழியர்கள் 

குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் தொடர்பான அச்சிடல் பணிகள் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சக திணைக்கள பணியாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்வதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதீப் புஷ்பகுமார (Pradeep Pushpakumara) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version