எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நுவரெலியாவில் ஆரம்பமாகியுள்ளது.
நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களும் இன்று (04.09.2024) வாக்களித்து வருகின்றனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.