Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் இரண்டு தினங்கள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இம்மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இன்று (4), நாளை (5) மற்றும் நாளை மறுதினமும் (6) தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிவிப்பு 

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27,195, கம்பஹா மாவட்டத்தில் 52,486, களுத்துறை மாவட்டத்தில் 37,361, காலி மாவட்டத்தில் 41,436, மாத்தறை மாவட்டத்தில் 30,882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22,167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 தபால் மூல வாக்கு

இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் மூல வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712,319 என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version