Home இலங்கை அரசியல் அரச ஊழியர்கள் வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் : மருதபாண்டி ராமேஷ்வரன்

அரச ஊழியர்கள் வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் : மருதபாண்டி ராமேஷ்வரன்

0

தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் (Rudhapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்று (02) டயகம பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போலி வாக்குறுதிகளைக்கண்டு ஏமாறக்கூடாது அத்தோடு நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்வைத்துள்ளார்.

அரச ஊழியர்கள்

எனவே, அரச ஊழியர்கள் தமது வாக்கை சரிவர பயன்படுத்த வேண்டும் அத்தோடு அரச ஊழியர்களின் கோரிக்கைகளையும் ஜனாதிபதி நிறைவேற்றி வருகின்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது எனவே அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்.

போலி வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால் நாடு இருக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version