Home முக்கியச் செய்திகள் அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்தை சாடிய தபால் ஊழியர்

அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்தை சாடிய தபால் ஊழியர்

0

அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.

அஞ்சல் தொழிற்சங்கங்கம் 

அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.

சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது. 

அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

https://www.youtube.com/embed/7sRs5XY9QHs

NO COMMENTS

Exit mobile version