Home முக்கியச் செய்திகள் மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டு

மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டு

0

புதிய இணைப்பு

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக, இலங்கை மின்சார சபை இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மின்வெட்டுக்கு விடுத்த கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இயக்குநர்  ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

மின்சாரத் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிர்வகிக்க, இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய நாட்களில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பல பிரிவுகளில் இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/2Xqhs_G95Eg

NO COMMENTS

Exit mobile version