Home இந்தியா பங்களாதேசத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

பங்களாதேசத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

0

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

[0ABVJHB
]

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டாக்காவில் இருந்து கிழக்கே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள நர்சிங்டி நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

கட்டிடங்கள் குலுங்கியதுடன், சில தற்காலிக கட்டமைப்புகள் இடிந்து விழுந்ததும் நகரவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்று நேரில் பார்த்தவர்கள் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், கொல்கத்தா, மேற்கு வங்கம் மற்றும் வழகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டாக்காவில் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் பேட்டியும் நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version