Home உலகம் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் வீதியில் தஞ்சம்

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் வீதியில் தஞ்சம்

0

இந்திய (india) மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிதியில் மக்கள்

அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்களை பிதியடையச் செய்துள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

நில அதிர்வு

இதேவேளை இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் (Jammu and Kashmir) மாநிலம் பாரமுல்லாவில்
நேற்று (20.8.2024) காலை 6.45 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் ஏழு நிமிட இடைவெளியில் 6.52 அளவில் 4.8 என்ற ரிக்டர் அளவில் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version