தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த
தினம் நல்லூரில் கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின்
பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு
இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டதுடன் கேக், இனிப்பு
மற்றும் மர கான்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
