Home இலங்கை அரசியல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.. பிரபு எம்பி

வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.. பிரபு எம்பி

0

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர்
விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த
விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக
நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில்
கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம்
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான்
கும்பிலாமடு வீதியினை கான்கிரீட் ரீதியாக மாற்றும் வேலை திட்டம் இன்றைய தினம்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 30 மில்லியன் ரூபா

அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல்
வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி
அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

615 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்
மூன்று மாத செயற்பட்டமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்பு
பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, “பாதைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது தொடர்பில் இந்த எங்களது முதலாவது கன்னி
வரவு செலவுத் திட்டத்தில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக 14 பில்லியன்
ரூபாய்களை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

அதன் ஊடாக பல ஆயிரம் வீதிகளை
அமைப்பதற்காக குறிப்பாக கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக முன்னாயத்தம்
மேற்கொண்டு இருக்கின்றோம்.

அதேபோன்று இன்றைய தினம் எமது வீதி அபிவிருத்தி அமைச்சின் விமல் ரத்தநாயக்க
அவர்களின் தலைமையின் கீழ் இன்று முதலாவது வேலை திட்டமாக நாடு பூராகவும் இந்த
வேலை திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அந்த
அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இந்த வீதியினை முதலாவதாக
ஆரம்பிப்பதற்காக வேலைகளை முன்னெடுத்திருந்தோம்” என குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version