Home சினிமா தொடர்ந்து மூன்று ஹிட் கொடுக்கப்போகிறாரா பிரதீப்.. Dude, LiK படங்களின் ரிலீஸ் அறிவிப்பு..

தொடர்ந்து மூன்று ஹிட் கொடுக்கப்போகிறாரா பிரதீப்.. Dude, LiK படங்களின் ரிலீஸ் அறிவிப்பு..

0

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் சென்சேஷனல் ஹீரோவாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு டிராகன் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் வெளிவந்துள்ளது.

Dude 

இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு திரைப்படங்கள் இதே ஆண்டில் வெளிவரவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்து வரும் Dude திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

ரெட்ரோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. இதுவரை எவ்வளவு செய்துள்ளது வசூல் தெரியுமா

LiK 

இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் LIK படத்தின் ரிலீஸ் தேதியும் வெளிவந்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 18ம் தேதி LIK படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் டிராகன் படத்தை தொடர்ந்து Dude மற்றும் LiK ஆகிய திரைப்படங்களும் இதே ஆண்டு வெளிவரவுள்ளது. டிராகன் வெற்றியை தொடர்ந்து இதே ஆண்டில் வெளிவரும் Dude மற்றும் LiK படங்களும் வெற்றியடைந்து, 2025ம் ஆண்டு பிரதீப்பிற்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று தருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version