பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் வசூல் நாயகனாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே படத்தின் மூலம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்தார்.
முதல் படமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில், அதை தொடர்ந்து வெளிவந்த டிராகன் திரைப்படமும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. தற்போது தொடர்ந்து இரண்டு ரூ. 100 கோடி படங்களை கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக LIK மற்றும் PR 04 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்
இதில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் PR 04. இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து சரத்குமார், மமிதா பைஜூ ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
first லுக்
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் first லுக் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் 4வது திரைப்படத்திற்கு ‘DUDE’ என தலைப்பு வைத்துள்ளனர்.
கையில் தாலி, முகம் மற்றும் கையில் காயங்களுடன் படத்தின் ஹீரோ பிரதீப் இந்த போஸ்டரில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த போஸ்டர்..
