Home சினிமா பிரதீப் ரங்கநாதன் படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய OTT நிறுவனம்.. எவ்வளவு தெரியுமா

பிரதீப் ரங்கநாதன் படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய OTT நிறுவனம்.. எவ்வளவு தெரியுமா

0

Dude

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப். லவ் டுடே மற்றும் டிராகன் என தொடர்ந்து இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த இரு படங்களுமே உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

டிராகன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் Dude. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் சரத்குமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

OTT 

இந்த நிலையில், Dude திரைப்படம் OTT உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுவும் ரூ. 25 கோடிக்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த படங்களில் அதிக விலைக்கு OTT-ல் வியாபாரம் ஆன படம் ஆகும். மேலும் இப்படம் டிராகன் படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version