Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் : தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் : தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

0

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள் 

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை உள்ளடக்கி பலமான அணிகளை களமிறக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், அங்குள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுக்கவும் கட்சியின் செயற்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version