Home சினிமா கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த கூடாது.. பிரேமலதா பேட்டி!!

கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த கூடாது.. பிரேமலதா பேட்டி!!

0

கோட் 

நடிகர் விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும் மறந்த பிரபல நடிகர் விஜயகாந்த் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தது.

தற்போது கோட் படத்தின் VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

AI பயன்படுத்த கூடாது

இந்நிலையில் AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த கூடாது என்று பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version