Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

0

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட
செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (19.09.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு
ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து
நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க
இடமளிக்க முடியாது.

தெல்லிப்பழையினைச் சொந்த இடமாகக் கொண்டு பருத்தித்துறையில் தற்காலிகமாக
வசித்து வருகின்றவர்களை வியாபாரி மூலையிலிருந்து தெல்லிப்பழையில்
வாக்களிப்பதற்கு போக்குவரத்து பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைக்காக 8232 உத்தியோகத்தர்கள் மற்றும் 2100 பொலிஸாரும் கடமையில்
ஈடுபடவுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் 42 பேருந்துகளும், தனியார் போக்குவரத்துச்
சங்கம் மூலம் 132 பேருந்துகளும் தேர்தல் கடமைகளுக்காக ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version