Home இலங்கை அரசியல் ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

0

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஒத்துழைப்பு

வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் விமானப்படையில் தற்போது காணப்படும் தேவைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வையிஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட விமானப்படையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


NO COMMENTS

Exit mobile version