Home இலங்கை அரசியல் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

0

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ள..

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து சில வீதிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி இப்பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து மக்கள் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய நாட்டை உருவாக்கும்.

மேலும், வடக்கு மாகாணத்தில் வீதிகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, வடக்கில் தென்னை செய்கைக்காகவும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அநுர குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version