Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

0

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசின் நடவடிக்கைகள், பொதுத் தேர்தல் முடியும் வரை புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் பொது நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைத்தது, அதன் கீழ் 130 பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பிற்காக பட்டியலிடப்பட்டன.


மறுசீரமைப்பு நடவடிக்கை

எனினும் பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசின் நடவடிக்கைகள் பொதுத் தேர்தல் முடியும் வரை புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அமைச்சரவை அனுமதி

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களம், சபைகள் என்பன நட்டத்தில் இயங்கும் நிலையில் அவற்றை இலாபமீட்டும் நிறுவனங்களாக மறுசீரமைக்கும் யோசனைக்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் நட்டமடையும் நிலையில், அவற்றின் சுமை பொதுமக்களை சென்றடைவதாகவும், அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version