தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடக மாநாடுகளை நடத்தி தெரிவித்து வருகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளுக்கமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் முனைகின்றது என்று கூறுவது விந்தையாக உள்ளது.
கோட்டாபய அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் பலபயணத்தடைகளை விதித்திருந்தனர் என குறிப்பிட்டார்.
