ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்பு ஊர்தி அணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே. டி. லல்கந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு ஊர்தி அணி தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் பொதுக் கூட்டமொன்றில் பேசும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரிய பாதுகாப்பு
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி பயணிக்கும்போது அவருடன் ஒரு குழு செல்ல வேண்டியது அவசியம். இது தவிர்க்க முடியாத ஒன்று.
முந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போதையவற்றை ஒப்பிடுவது பாரிய முட்டாள் தனம்.
ஜனாதிபதிக்கு இன்னும் பெரிய பாதுகாப்பு இருக்க வேண்டும். எத்தனை பேர் விமர்சனம் செய்தாலும், அது அவ்வாறு இருக்கவேண்டும்.
எனினும், தோழர் அநுர அதனை விரும்ப மாட்டார், ஆனாலும் தேவைப்பட்டால் உலங்குவானூர்தி கூட வழங்கப்படவேண்டும்.” என்றார்.
