யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் “பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டது” என பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது சிறப்பான ஒரு விடயமாகும் என கூறப்படுகிறது.
தமிழ்மொழிக்கு முதலிடம்
தமிழ் எழுத்துக்கள் பிழையின்றி தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்கி, “மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.”என பொறிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள், கட்டடங்களில் இவ்வளவு காலமும் வடிவமைக்கப்பட்ட கல்வெட்டில், செலவலிக்கப்பட்ட நிதித்தொகை, எந்த அமைச்சு, எந்த அமைச்சர், உள்ளூராட்சி பிரதிநிதிகள் முதற்கொண்டு காணப்படும் ஆனால் இந்த விடயங்களை தவிர்த்து குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டமையானது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.
இதன்போது சம்பிரதாயபூர்வமாக 03 பேருக்கு கடவுச்சீட்டுக்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், ஒருவருடைய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய கடவுச்சீட்டுக்கள்
இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த அலுவலகம் 70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
