இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சம்பிரதாயபூர்வமாக அவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் 11.30 மணியளவில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை இடம்பெறும்.