Home இலங்கை அரசியல் சாதனை வீரன் சஹ்மி ஷஹீத்துக்கு ஜனாதிபதி பாராட்டு

சாதனை வீரன் சஹ்மி ஷஹீத்துக்கு ஜனாதிபதி பாராட்டு

0

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1,500 கிலோமீற்றர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

அதன்போது பேருவளை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, சுன்னாகம், மன்னார், அநுராதபுரம், புத்தளம், கொழும்பு, மாரவில, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய முக்கிய நகரங்களைக் கடந்து பேருவளைக்குத் திரும்பினார்.

பயணிக்கும் இடங்கள்

இந்த பயணத்தின் போது, சமூக வலைதளங்கள் மூலம் தான் பயணிக்கும் இடங்களைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

சஹ்மியை வரவேற்பதற்காக பேருவளையின் ஒட்டுமொத்த மக்களும் பேருவளை நகரில் திரண்டதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களின் கோசங்களுடன், தான் பயணத்தைத் துவங்கிய அதே இடத்தில் பயணத்தை முடித்து  இறைவனைத் தொழுது நன்றி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பேருவளை கடற்கரை மைதானத்தில் மேடையேறிய சஹ்மி சஹீத், பொதுமக்கள் முன் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியிருந்தார்.

இவ்வுரையில், அனைத்து இலங்கை மக்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் இலங்கை பாதுகாப்பு துறையினருக்கும் என அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு பயணத்தின் அனுபவங்களையும் மக்கள் முன் பகிர்ந்துகொண்டார்.

NO COMMENTS

Exit mobile version