Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாணத்தை பரந்த அபிவிருத்தியை நோக்கி நகர்த்தும் திட்டம்: ஜனாதிபதி விசேட அழைப்பு

கிழக்கு மாகாணத்தை பரந்த அபிவிருத்தியை நோக்கி நகர்த்தும் திட்டம்: ஜனாதிபதி விசேட அழைப்பு

0

அடுத்த ஐந்து வருடங்களில் கிழக்கில் பரந்த அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத் திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (22) நடைபெற்ற இளையோர் அணி சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வெற்றிகரமான தலைமைத்தும்

நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற வகையில் ஜனாதிபதி கொண்டிருக்கும் அனுபவங்களுக்கமைய எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை யாதென மட்டக்களப்பு மாவட்ட இளையோருடனான சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளார்.

 இந்தச் சந்திப்பில் பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version