Home இலங்கை அரசியல் ஜனநாயக ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு ஊடக நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனநாயக ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு ஊடக நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

0

Courtesy: Sivaa Mayuri

நெறிமுறையற்ற செயற்பாடுகளை கைவிட்டு ஊடகவியலில் புதிய ஜனநாயக அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி அநுகுமார திஸாநாயக்க ஊடக நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறையில் நேற்று (30) நடைபெற்ற பிரசாரப் பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க, பிரச்சினைகளை உண்மையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முக்கிய பொருளாதார விடயங்கள்

அத்துடன் பொறுப்பான அறிக்கையிடலை நோக்கி, தம்மை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை முக்கிய பொருளாதார விடயங்களில் தவறான செய்திகளை ஒளிபரப்பியதற்காக ஒரு முக்கிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை அவர் விமர்சித்துள்ளார்
எனினும் அந்த அறிக்கை பின்னர் மாற்றப்பட்டது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நிர்வாண நிலையை தவிர்த்து ஜனநாயக ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் என்று அவர் ஊடக நிறுவனங்களை கேட்;டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version