Home இலங்கை அரசியல் தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் அநுர மீது பகிரங்க குற்றச்சாட்டு

தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் அநுர மீது பகிரங்க குற்றச்சாட்டு

0

ஊழல் மோசடிகளை ஒழிக்கப் போவதாக சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது தேர்தல் செலவின அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்காக பெற்றுக்கொண்ட நிதி மற்றும் அதற்கான செலவு தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்று 21 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

இந்நிலையில் 18 வேட்பாளர்கள் மட்டுமே செலவுகளுக்கான அறிக்கையை சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பத்து வேட்பாளர்கள் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை

இவ்வாறான நிலையில், தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிராக போராடும் ஜனாதிபதி உரிய காலத்திற்குள் தனக்கான அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ள நிலையில், ஊழல்வாதிகளுக்கு எதிராக செயற்படுவாரா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version