நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றியையும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியையும் இந்நாட்டு மக்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினர்.
ஜனநாயகம்
இந்நாட்டின் ஜனநாயகம் தேர்தல் காலத்தில் வாக்களிக்கும் போது மட்டுமல்ல, அதற்கு பின்னரும் தொடரும் ஒன்றாகும்.
எனவே, கடந்த தேர்தல்களின் பின்னர் மக்கள் எங்களுடன் பயணித்ததை போன்று இந்த தேர்தலின் பின்னரும் பயணிப்பார்கள் என நம்புகின்றேன்” என கூறியுள்ளார்.
