கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி தொடக்கம் 04 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,227 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை
அரச ஊழியர்களின் சம்பள திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது, இது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.