வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரினது கல்வி நடவடிக்கைகளுக்காகவும் இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறித்த விடயத்தை அறிவித்துள்ளது.
