Home இலங்கை அரசியல் தமிழ் பொதுக்கட்டமைப்பை பேச்சுக்கு அழைத்த ஜனாதிபதி

தமிழ் பொதுக்கட்டமைப்பை பேச்சுக்கு அழைத்த ஜனாதிபதி

0

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கியுள்ள தமிழ்த்
தேசியப் பொதுக்கட்டமைப்பைப் பேச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பையேற்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு பேச்சுக்குச்
செல்லுமா என்பது தொடர்பில் தெரியவரவில்லை. 

பெருகும் ஆதரவு

இதேவேளை, தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/president-invited-the-tamil-public-administration-1724509474

NO COMMENTS

Exit mobile version