Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (19.7.2024) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வர்த்தமானி

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version