Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுர வாக்குறுதிகளை மீறி வருகின்றார்

ஜனாதிபதி அநுர வாக்குறுதிகளை மீறி வருகின்றார்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்பொழுது தனியார் ஜெட்களில் பயணிக்கின்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

விமானங்களில் அதி சொகுசு இருக்கைகளில் பயணிக்க மாட்டேன் என உறுதிமொழி வழங்கிய ஜனாதிபதி, இன்று தனியார் ஜெட்களைப் பயன்படுத்தி பயணங்கள் மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மோசமான முறையில் சிறப்புரிமைகளை அனுபவித்தார் என தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

[NPEKU32
]

விமானங்களில் வர்த்தக வகுப்பு இருக்கைகளில் பயணிப்பதில்லை எனவும் சிக்கன வகுப்பு இருக்கைகளில் பயணிப்பதாகவும் உறுதியளித்த ஜனாதிபதி இன்று தனியார் ஜெட்களில் பயணம் செய்வதாக ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவ்வாறு உறுதிமொழி வழங்கவில்லை என யாரேனும் கூறினால் நான் அந்த ஒளிப்பதிவுகளை காண்பிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஜெட் எவ்வாறு கிடைத்தது யார் அதற்கு அனுசரணை வழங்கினார்கள் என்பது குறித்து இதுவரையில் யாரும் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று ராஜபக்சகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விடவும் இந்த அரசாங்கத் தரப்பினருக்கு எதிராக பத்து மடங்குகள் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version