Home இலங்கை அரசியல் நாட்டை மீட்டெடுத்த ரணிலை தூக்கி எறிந்த மக்கள்: ஜீவன் தொண்டமான் விசனம்

நாட்டை மீட்டெடுத்த ரணிலை தூக்கி எறிந்த மக்கள்: ஜீவன் தொண்டமான் விசனம்

0

நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை (Ranil Wickremesinghe) மக்கள் தூக்கி எறிந்தவாறு தம்மை மக்கள் தூக்கி எரியாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட
வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய
ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் (16) நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 அடிப்படை சம்பளம்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

“பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமும்
மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள்
கோரிக்கையை முன்வைத்த போது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான
தேசிய மக்கள் சக்தி.

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில்
குரல் கொடுத்தேன் அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான்
குரல் கொடுத்திருக்கின்றேன் எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை நுவரெலியா
மாவட்டத்தில் இம்முறை 30 சுயாதின கட்சிகள் உருவாகியுள்ளன.

எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதி நிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நுவரெலியா
மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால்
முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நான் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி
இராமகிருஷ்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராமேஸ்வரன் உதயகுமார் போன்ற
அநேகமான பெயர்கள் காணப்படும்.

ஆனால் தற்போது ரவிந்திரன் என்பவருடைய பெயரும்
காணப்படும் அவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர் அவர் யார்
புரொடொப் தோட்டபகுதியில் முகாமையாளராக இருந்து மக்களை தாக்கி தொழிற்சாலையில்
அடைத்து வைத்திருந்தவர்.

 கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம்

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தான் சென்று அம் மக்களை விடுவித்தோம் அவர் போன்ற ஒருவருக்காக மலையகத்தில் சிலர் கொடியினை
உயர்த்தி கொண்டு ஆதரவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

தனக்கு கிடைத்த வளங்களை வைத்து மாத்திரம் வேலை செய்ய முடியுமே தவிர வளங்களை
உருவாக்க முடியாது நாடு வங்குரோத்து அடைந்த போது கூட மலையகத்தை பொறுத்தவரையில்
இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

ஆரம்பகாலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10000ம் வீடுகள் ஆனால் 10000ம் வீடுகளை வைத்து ஆறு
அரசியல்வாதிகள் ஒன்றறை இலட்சம் பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தவறான வதந்திகளை பரப்பாது
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய
அனைத்து கட்சிகளும் இல்லாமல் போயுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version