Home இலங்கை அரசியல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya ) ஆகியோர் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க தீர்மானித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதும் அவர் எங்கு தங்கியுள்ளார் என தேடப்பட்டு வருகின்றது.

இதன்போது அவர் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரிவந்துள்ளது.

 அதிரடி தீர்மானம்

மேலும் அவர் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரதமரும் அலரி மாளிகையை பயன்படுத்தாமல் தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அரச சொத்துக்களை வீண் விரயம் செய்வதை தவிர்த்து பணத்தை சேமிக்கவுள்ளதாக தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version