Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளுக்கான செலவினங்களை வெளியிட்ட ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளுக்கான செலவினங்களை வெளியிட்ட ஜனாதிபதி

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆடம்பரமான வீடுகளை வழங்குவதற்காக அரசு
மேற்கொண்ட கணிசமான செலவினங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) வெளிப்படுத்தியுள்ளார்.

இது வரி செலுத்துவோர் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதத்திற்கு 2 மில்லியன் ரூபாய்
மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். அதேபோல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதத்திற்கு 0.9 மில்லியன்
ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டில் வசிக்கிறார்.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு மாதாந்தம் 4.6
மில்லியன் ரூபாய் செலுத்தப்படுகிறது.
அத்துடன் அந்த வீடு ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அத்தகைய சலுகைகளை தவிர்ப்பதில் சில முன்னாள் ஜனாதிபதிகளின்
செயற்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப்பூர்வ இல்லம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச வீட்டை ஏற்காததற்காக ஜனாதிபதி
திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்,
அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அண்மையில் தனது அரச
இல்லத்தை ஒப்படைத்துள்ளதாக அநுர குமார குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் சிறிது காலத்திற்கு முன்னர் தனது
அதிகாரப்பூர்வ இல்லத்தை திருப்பித் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்பப்
பெறப்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசியல் பிரமுகர்களுக்கான தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கான தனது
நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தனக்குக் கிடைத்த பொது ஆணை, அத்தகைய சலுகைகளை மட்டுப்படுத்தி, நாட்டின்
வளர்ச்சிக்கு வளங்களை திருப்பிவிட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாகவும்
அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version