Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் உள்நாட்டுப் பயணம்: தகவல் அறியும் உரிமை கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரிப்பு

ஜனாதிபதியின் உள்நாட்டுப் பயணம்: தகவல் அறியும் உரிமை கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரிப்பு

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆகஸ்ட் 4, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு (RTI) பதில் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதில், தகவல் அதிகாரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.ஜி.எஸ்.சி ரோஷன் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை

ஆகஸ்ட் 27 திகதியிட்ட பதிலில், ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (1) (b) (i) இன் கீழ் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக செயலகம் தெரிவித்துள்ளது.

ஜினத் பிரேமரத்னவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சட்டத்தின் பிரிவு 31 (1) இன் கீழ் 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீடுகள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version