Home இலங்கை அரசியல் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!

அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!

0

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உணவு பொருட்களின் இறக்குமதி

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுமா என ஜனாதிபதி குறித்த சங்கத்திடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், இதுவரையில் தமது இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.        

NO COMMENTS

Exit mobile version