Home இலங்கை அரசியல் அநுரவின் கொள்கை பிரகடன உரை! தெளிவற்ற பகுதி தொடர்பில் அவதானம்

அநுரவின் கொள்கை பிரகடன உரை! தெளிவற்ற பகுதி தொடர்பில் அவதானம்

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்வைத்த கொள்கை பிரகடன உரையில், வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி  தெளிவாக குறிப்பிடவில்லை. ஆகவே இது சற்று அவதானிக்கக் கூடியதொரு விடயமாகும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha De Silva) தெரிவித்துள்ளார்.

நாளுமன்றத்தில் நேற்றையதினம் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார். 

ஜனாதிபதியின் கொள்கை பிரடகன உரை

இந்த உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரத்துக்கு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்காக கடுமையாக உழைத்த எரான் விக்ரமரத்ன, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளிலேயே தோல்வியடைந்தார்கள். இவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம்.

ஜனாதிபதியின் உரையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வருகிறோம்.

வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆகவே இது சற்று அவதானிக்க கூடியதொரு விடயமாகும்.

அரசாங்கம் எவ்வகையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்யப்படும் போது பெரும் அரிசி ஆலையாளர்கள் பயனடைவார்கள். இவ்விடயத்தில் அரசாங்கம் நீண்டகால கொள்கைத் திட்டத்துக்கு அமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version