Home இலங்கை அரசியல் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

0

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்
வெற்றி நமதே ஊர் எமதே என்னும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி தேர்தல்
பரப்புரைக் கூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா நகரசபை மைதானததில் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியா வருகை

குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தரவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version