Home இலங்கை அரசியல் சீனாவுக்கு விஜயமாகவுள்ள இலங்கை ஜனாதிபதி!

சீனாவுக்கு விஜயமாகவுள்ள இலங்கை ஜனாதிபதி!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜனவரி 13 முதல் 17 வரை சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஜனாதிபதியான பின்னர் அவர் வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

உடன்படிக்கை

இந்த விஜயத்தின் போது, அவர் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த மாதம் இந்தியாவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உட்பட்டவர்களை சந்தித்தார்.

அத்துடன் இந்தியாவுடன் சில உடன்படிக்கைகளும் இறுதிப்படுத்தப்பட்டன.  

NO COMMENTS

Exit mobile version