Home இலங்கை அரசியல் ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்

ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் முயீஸ் இன் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார மாலைதீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவு பயணம்

மாலைதீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், வர்த்தகத் தொடர்புகளை விரிவாக்கல் குறித்தும் இந்த விஜயத்தின் போது இருதரப்புக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளது.

அத்துடன் மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்வுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version