Home இலங்கை சமூகம் முக்கிய அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

முக்கிய அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு (UAE) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரிடத்திலிருந்து முக்கிய அமைச்சகங்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சராக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

பதில் பாதுகாப்பு அமைச்சராக  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர கடமையாற்றவுள்ளார். 

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் 

அத்துடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் வைத்தியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட அமைச்சுக்கள் ஜனாதிபதியுடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் பொறுப்பின் கீழ் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளதன் காரணத்தினாலேயே குறித்த பதில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version